19 ஜூலை 2010

இநதிய ரூபாய் நாணயத்திற்கு புதிய சின்னம் வெளியீடு

         சர்வதேச நாணயங்களான ‌‌ அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, யென் ஆகியவற்றிக்கு தனிப்பட்ட சின்னம் உள்ளது போல் இ‌ந்திய ரூபாய் நாணயத்திற்கு‌ எனத் தனிப்பட்ட குறியீடு  கடந்த ஜூலை 15ம் நாள் மத்திய அரசினால் வெளியிடப்பட்டு உள்ளது.


         இந்தக் குறியீட்டினை உருவாக்கிட மத்திய அரசு ஏற்கனவே போட்டி ஒன்றை  அறிவித்திருந்தது.  போட்டிற்கு வரப்பெற்ற பல்லாயிரக் கணக்கான மாதிரிக் குறியீட்டிலிருந்து நடுவர் குழு ஐந்து மாதிரிக் குறியீடுகளைத்  தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது.   மத்திய அரசு  அதிலிருந்து ஒன்றை  தேர்வு செய்து இந்திய ரூபாய் நாணயத்தின் குறியீடாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


        இதில்  மகிழ்ச்சிகொள்ள வேண்டிய  விசயம் என்னவென்றால் இக்குறியீட்டினை உருவாக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமார்.  இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.2,50,000-ஐ மத்திய அரசு வழங்குகிறது.

கருத்துகள் இல்லை: