08 நவம்பர் 2008

இணையப் பக்கங்களில் தமிழை உள்ளீடு செய்திட எளிய வழி

-->
TamilVisai (TamilKey) 0.4.1 Firefox Add-on

      இணைய பக்கங்களில் தமிழில் தட்டச்சு செய்திட  தனியே எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமலேயே தட்டச்சு செய்திட முடியும்.   Firefox உலாவிக்கான Add on TamilVisai(Tamilkey)-ஐ நிறு‌வுதல் மூலம் இது சாத்தியமாகும். இந்த Add on-ஐ நிறுவ Firefox உலாவி மூலம் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 என்ற இணையப்பக்கத்திற்கு சென்று இந்த Add on-Firefox உலாவியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.


















இந்த Add on-ல் உள்ள அஞ்சல், தமிழ்99, பாமினி, பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, அவ்வை முதலிய விசைப்பலகைகளைப் பயன்படுத்தி இணையத்தில் நம்மால் எளிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம். ஒவ்வொரு தமிழ் விசைப்பலகைக்கும் மாறிக்கொள்ள ஒவ்வொரு குறுக்கு விசைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்கு தெரிந்த விசைப்பலகையினை பயன்படுத்தி இணையத்தில் எளிமையாக தமிழை தட்டச்சு செய்யலாம். F9 விசை பயன்படுத்தி மீண்டும் ஆங்கில வி்சைப்பலகைக்கு மாறிக்கொள்ளலாம். நான் பழைய தட்டச்சு முறையினை பயன்படுத்தி இணையத்தில் மிக எளிமையாக தமிழை தட்டச்சு செய்து வருகிறேன்.